காலையிலிருந்தே கதவுக்கும் கண்ணாடிக்குமாய்
அலைகின்றன அவள் கால்கள்,
மாலை வரப்போகும் பின்னாளில் மாலை தரப்போகும்
அவள் மன்னவனுக்காய்
இங்கு வைத்ததை அங்கும் அங்கு வைத்ததை இங்குமாய்,
அரக்கப் பரக்க ஏதோ செய்துகொண்டிருந்தன கைகள்,
மனம் மட்டும் புகைப்படத்தில் புன்னகைத்துக் கொண்டிருந்த
அவன் முகத்தையே அசை போட்டுக் கொண்டிருந்தது .
கனவுகள் சுமந்த கண்கள் இரண்டும் மின்மினிகளாய்,
இமைப்பறவைகள் சிறகடிக்கப் பளபளத்தன,
வருமவள் காதலனுக்காய் அவளோடு சேர்ந்து,
காத்திருக்கிறது ஓர் பூச்செண்டும்!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக