ஓர் மழைப்பொழுதின் இனிமையில்,
துளி ரசிக்கத் துடிக்கும் மனதும்,
உயிர் சிலிர்த்து உறையும் உடலும்,
அள்ளி அள்ளிப் பருகியும் கூட அலுக்காத அழகுகள்,
ஆயிரமாயிரமாய்க் கொட்டிக் கிடந்தும்,
அகத்தில் நிறைந்து கிடப்பதென்னவோ
அற்பக் கவலைகளும் அடங்காத ஆசைகளுமே,
தேவைகள் தாண்டி ஏக்கங்கள் கடந்து,
உயிர் உருகி உடல் கரைந்து,
