நடந்து கொண்டேயிருக்கிறது ஓர் போட்டி,
அறிவுக்கும் உணர்வுகளுக்கும்,
இதயத்தின் தட்டுத் தாழ,
மூளையின் நிலைமை பரிதாபகரமாய்,
சரியென்று மூளை சொன்னாலும்,
இல்லையென்கிறது இதயம்,
இலகுவில் எதையும் உதறித் தள்ளவும் முடியாமல்,
எடுத்தணைத்து அனைத்தையுமே இன்புறவும் முடியாமல்,
பிசைந்து பிசைந்து குருதி பாய்ச்சுகின்றது இதயம்,
மடிந்து மடிந்து முடங்கிக் கொள்கின்றது மூளை!!!

