எங்கு தொடங்கியது உன் மீதான என் நேசம்?
எப்போது உன் தேடல்களும் என் தேடல்களும் ஒரே புள்ளியில் சந்தித்தன?
நான் உணர்வதையே நீயும் நீ நினைப்பதையே நானுமாக எப்போது இரு மனங்களும் ஒன்றாயின?
புழுதி படிந்த கல்லாயிருந்த என்னை பட்டை தீட்டிய வைரமாய் ஒளிரச் செய்தவன் நீ.
என் அவநம்பிக்கைகளை எல்லாம் நம்பிக்கைகளாக மாற்றியவன் நீ,
பாலைவனங்கள் மட்டுமே என் பாதையில் இருக்கும் எனச் சோர்ந்து போயிருந்தவளுக்கு,
சோலைகளும் எதிர்ப்படும் என்பதைச் சொல்லித் தந்தவன் நீ,
உன்னால் என் சஹாராக்களில் நீரூற்றுகள் சுரந்தன.
எரிமலையாய்க் கனன்று கொண்டிருந்த மனது ஓடை நீராய்க் குளிர்ந்தது.
அன்புக்கு சாதிக்கும் சக்தி அதிகம் என்பதைப் புரிந்து கொண்டேன்.
இனிக் கடலும் தாண்டுவேன் நீ கரம் கோர்த்தால்.
பாலையிலும் பாதம் குளிர நடப்பேன் உன் துணை இருப்பதால்.
நெடுஞ்சாலைகளும் நீளம் குறைந்து போகும் உன் நினைவுகளோடு நான் நடந்தால்.



