உள்ளங்கள் பேசும் போது உதடுகளுக்கு ஏது வேலை??
இதயங்கள் இடம் மாறினால் இமைகளுக்கு என்ன தேவை??
இவர்கள் காதல் தேசத்தில் தங்களை விரும்பித் தொலைத்த காதலர்கள்,
இங்கே கேள்விகளும் கிடையாது, தேவைகளும் கிடையாது,
இந்த தேசத்தில் வண்ணத்துப் பூச்சிகள் சேதி சுமக்கும்,
வண்ண வண்ண மலர்கள் துணை இருக்கும்,
வாசனை சுமந்து தென்றல் வீசும் ,
வருடி செல்ல அலைகள் வரும்,
அவன் இமை திறக்கும் வரை அவளும்,
அவள் இமை திறக்கும் வரை அவனும்,
இருவர் மனமும் பேசும் காதல் மொழி,
அதுவரை காத்திருக்கும் மலர்களும் அழகான மனங்களும்!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக