காரிருள் இரவுகளின் மௌனத்திரை கிழித்து
மனதின் சுவர்களில் சத்தம் எழுப்புகின்றன ஓயாது உன் நினைவுகள்!!!
விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையிலான அந்த மெல்லிய கோட்டைத்
தாண்டிய பொழுதுகளின் உணர்வுக் கலவையில் கலந்து கரைந்துகொண்டது மனம்!!!
ஏதோ ஓர் புள்ளியில் தொடங்கி எனை வந்து சேர்ந்த உன் நினைவுகளின்
ஒளிப்பாதையில் எதிர்த்திசையில் பயணிக்க ஆரம்பிக்கின்றன என் நினைவுகளும்!!!
சுற்றிச் சுழன்று அலைந்து திரிந்து சோர்ந்து போய்
என்னிடமே மீள்கின்றன பல வினாக்கள்!!!
வினாக்களே விடைகளாயும் விடைகளே வினாக்களாயும்
மாறி மாறி ஆடிக்கொள்ளும் கண்ணாமூச்சியில் கோபம் கொள்ளவும் தவறவில்லை இதயம்!!!
சிக்கல்கள் பல வந்தாலும் சிந்தித்துத் தீர்வு காணும் மூளை கூட,
எங்கோ சிந்திக்கத் தொடங்கி தீர்வற்றதோர் இடத்தில் இளைப்பாறிக் கொள்ளும் சோகம் தொடர்கிறது!!!
தன் பணியில் தடையின்றிச் சுழலும் காலம் மட்டும் மெல்லக் கண்விழித்துக் கொள்கின்றது
இரவை மறந்து புதியதோர் விடியலுக்காய்!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக